ராஜஸ்தானின் சிகாரில் பயங்கர விபத்து - 10 பேர் பலி - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் பைக் மற்றும் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் சோமு நகரைச் சேர்ந்தவர்கள் காரில் கண்டேலாவில் உள்ள கோவிலுக்குச் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பல்சானா - கண்டேலா சாலையில் மாஜி சாஹப் கி தானி அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அப்பகுதியில் சென்ற பைக் மீதும், எதிரே வந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் பைக்கில் சென்ற தம்பதி மற்றும் குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விஜய் (27), பூனம் (26) மற்றும் அவரது 1.5 வயது மகள் நிக்கு, அனுராதா (25), அரவிந்த் (23), ரேகா (23), அஜய் (20), கோலு (2.5) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் அசோக் கெலாட், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 killed in road accident in Rajasthan Sikar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->