ரேஷன் கார்டு மட்டும் இருந்தால் போதும்? 10 லட்சம் கடன் கிடைக்கும் - எப்படி தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசும், மாநில அரசுளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு பிபிஎல் அட்டைகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு இலவச ரேஷன் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த அட்டை மூலம் ரூ.10 லட்சம் வரை கடனும் பெறலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

அதாவது, ஹரியானா மாநிலத்தில் பிபிஎல் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களின் வணிகத்தை ஊக்குவிக்க, மாநில அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. இந்த கடன் தொகை 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கும். தொழில்துறை மற்றும் சிறு வணிகத்தின் கீழ் NSFDC மூலம் பட்டியலிடப்பட்ட சாதிகளைச் சேர்ந்த BPL ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தொழில் கடன்கள் வழங்கப்படுகின்றன.

எப்படி விண்ணப்பிப்பது?

பிபிஎல் ரேஷன் கார்டில் கடன் பெற, முதலில் வங்கிக்குச் சென்று, இந்த அட்டையில் கிடைக்கும் கடன் குறித்த தகவல்களைப் பெற்று, பின்னர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

படிவத்தில் கொடுக்கப்பட்ட தகவலை சரிபார்த்த பிறகு, கடன் தொகை உங்களுக்கு விடுவிக்கப்படும். இந்த கடனுக்கான வட்டி விகிதத்தில் அரசு தள்ளுபடியும் வழங்குகிறது. 

இந்தக் கடன் பெறுவதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஹரியானா மாநிலத்தில் வசிப்பவர்கள் யாரேனும் பட்டியலிடப்பட்ட சாதியின் கீழ் வரும் மற்றும் பிபிஎல் ரேஷன் அட்டையைக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கடனுக்கு தகுதி பெறுவார்கள்.

யாருகெல்லாம் இந்தக் கடன் கிடைக்காது :

பிபிஎல் ரேஷன் கார்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தக் கடன் வழங்கப்படுகிறது என்பதால், அத்தகைய குடும்பங்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் மற்றவர்களுக்கு கிடைக்காது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 lakhs loan to ration card


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->