மன்னார்குடியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை..!
nia officers raide in mannakudi thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதாவது, மன்னார்குடியில் ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாபா பக்ருதீன் வீட்டில் கடந்த 2022-ம் ஆண்டும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
English Summary
nia officers raide in mannakudi thiruvarur