டாடா ஹாரியர் EV அடுத்த மாதம் வெளியீடு: சிங்கிள் சார்ஜில் 600 கி.மீ. ரேஞ்ச்! எக்கச்சக்கமான அம்சங்களுடன் வெளியாகும் Harrier EV
Tata Harrier EV to launch next month 600 km on single charge Range Harrier EV launched with amazing features
டாடா மோட்டார்ஸ் தனது புதிய ஹாரியர் EV-யை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. இந்தியாவில் தயாராகும் ஆறாவது எலக்ட்ரிக் வாகனமாக, இது 2025-ம் ஆண்டு டாட்டாவின் முதல் முக்கிய வெளியீடாக அமைகிறது.
பிரத்யேக அம்சங்கள்
இந்த புதிய எலக்ட்ரிக் SUV-யில் மூடப்பட்ட ஃப்ரன்ட் கிரில், மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், ஏரோ-ஆப்டிமைஸ் அலாய் வீல்கள், டூயல்-டோன் ஃபினிஷ் மற்றும் EV பேட்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பேட்டரி மற்றும் பவர்
ஹாரியர் EV 75kWh பேட்டரி பேக், டூயல் எலக்ட்ரிக் மோட்டார், ஆல்-வீல் டிரைவ் (AWD) சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது 600KM வரை ரேஞ்ச் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்ஜிங் மற்றும் தொழில்நுட்ப வசதிகள்
11kW AC சார்ஜிங்
150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்
V2L (Vehicle-to-Load) & V2V (Vehicle-to-Vehicle) சார்ஜிங் வசதி
ரியர் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்
இன்டீரியர் மற்றும் கனெக்டிவிட்டி
12.3-inch இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே
வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ
360° சரவுண்ட் கேமரா (பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உடன்)
வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், OTA அப்டேட்கள்
பனோரமிக் சன்ரூஃப்
லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள்
இந்த SUV-யின் விலை ₹30-35 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய EV சந்தையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
English Summary
Tata Harrier EV to launch next month 600 km on single charge Range Harrier EV launched with amazing features