பத்து பணியிடங்களுக்கு 1000 பேர் போட்டி - குஜராத்தில் தள்ளுமுள்ளு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாவட்டம் பரூச் பகுதியில் ஜாகாதியா இடத்தில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்றுள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக இருந்த 10 பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான நேர்காணல் நடைபெற்றது. ஆனால், இந்த பணியிடத்திற்கு ஓராயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும், அங்கலேஷ்வர் பகுதியில் நேர்காணல் நடைபெற்ற தனியார் ஓட்டலின் நுழைவு வாசலின் இரு பகுதியிலும் நெருக்கியடித்து உள்ளே புகுந்தனர். பலர் கதவுக்கு வெளியே ஒருவரையொருவர் முட்டி, மோதியபடி நின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களால் நிற்க முடியாமல் கீழே விழுந்தனர். இருப்பினும், இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, ஆளும் பா.ஜ.க.வை கடுமையாக சாடியுள்ளது. நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், பா.ஜ.க. எம்.பி. மன்சுக் வசாவா தெரிவித்ததாவது, 10 காலியிடங்களை அவர்கள் நிரப்புகிறார்கள். அதற்கு முறையான விசயங்களை அவர்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அந்த நிறுவனமே இந்த சம்பவத்திற்கு காரணம். இது வேதனை தருகிறது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 peoples apply 10 posts in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->