"அயன்" பட பாணியில் வயிற்றில் ரூ.11 கோடி போதைப்பொருள்கள் கடத்தல் - நைஜீரியா பயணி கைது
11 crore worth drugs seized at Bangalore airport
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமான மூலம் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விமான பயணிகளிடம் தீவிர சோதனையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது எத்தியோப்பியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த நைஜீரியாவை சேர்ந்த பயணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். இதில் நவீன கருவி மூலம் பரிசோதனை செய்ததில் அந்த நபர் அயன் பட பாணியில் வயிற்றுக்குள் மாத்திரை வடிவில் போதை பொருள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பயணியை கைது செய்தனர். இந்நிலையில் அவரது வயிற்றுக்குள் இருந்த ரூபாய் 11 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து நைஜீரியாவை சேர்ந்த பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
11 crore worth drugs seized at Bangalore airport