12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வரவில்லை - வெளியான அதிர்ச்சி தகவல்.!
12 crores worthable 2000 thousand notes not returns in india
12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வரவில்லை - வெளியான அதிர்ச்சி தகவல்.!
கடந்த மே 19-ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், அந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தலாம் என்றும், அதுவரை இந்த நோட்டுகள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் ஏராளமானோர் மாற்றாமல் இருப்பதால் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:- " நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.3.43 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகளில் , 87 சதவீத நோட்டுகள் திரும்ப வந்துவிட்டது.
ஆனால், இன்னும் பன்னிரெண்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை" என்று தெரிவித்தார். இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
12 crores worthable 2000 thousand notes not returns in india