இதற்கெல்லாம் தற்கொலையா.? 12 வயது எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் செல்போன்கள் இன்றியமையாத முக்கிய தொலைத் தொடர்பு கருவியாக உள்ளது. அதன்படி, தொலை தூரங்களில் உள்ளவர்களுக்கு தகவல்களை தெரிவிக்கவும் நமது கருத்துக்களை பரிமாறவும் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் தற்போதைய காலகட்டத்தில் கலாச்சார சீரழிவிற்கு பயன்படுகிறது.

அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர். அதன்படி ஆன்லைனில் கேம் விளையாடி வெளி உலகத்தை மறந்து வேறொரு உலகத்திற்கு செல்கின்றனர். இதனால் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும், சில சிறுவர்கள் பெற்றோர்கள் செல்போனை தரவில்லை என்றால் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர பிரதேசம் மாநிலம் திப்பண்ணா பேட்டையை சேர்ந்தவர் நரேஷ். இவரது மனைவி ஜலா. இந்த தம்பதியினருக்கு 12 வயதில் சாய்சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அருகில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதில் நரேஷ் கடந்த ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிறுவன் சாய்சரண் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி நேற்று சுதந்திர தின விழாவிற்கு செல்லாமல் வீட்டில் இருந்த சாய்சரண் விளையாடுவதற்காக தனது அம்மாவின் செல்போனை கேட்டுள்ளார். அதற்கு, நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாட கூடாது என செல்போனை தர மறுத்துள்ளார்.

இதனால் மன விரக்தியடைந்த சிறுவன் சாய்சரண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கத்தி கதறி அழுதார். மேலும் இது குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் சிறுவன் சாய் சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 years old boy suicide for mother didn't give cellphone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->