பாஜகவிற்கு பெரும் பின்னடைவு! அதிரவைக்கும் தேர்தல் முன்னிலை நிலவரம்! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்குநடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மொத்தமுள்ள 13 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு வெளியாகிவிட்டது.

அதன்படி, பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வெற்றி பெற்றுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம், டேஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம், ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். இந்த தொகுதிகள் இரண்டாம் இடத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (பாஜக கூட்டணி) கடுமையான போட்டியை கொடுத்து வருகிறார்.

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த நான்கு தொகுதிகளிலும் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மத்திய பிரதேஷ் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

ஹிமாச்சல பிரதேச பொருத்தவரை மற்ற இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக தலா ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

மொத்தமாக இந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இண்டி கூட்டணி 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை 11 சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் திமுக வேட்பாளர் சிவா 69,800 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 30 ஆயிரத்து 421 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 5918 வாக்குகளை பெற்றுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 Assembly By Poll Result 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->