நடுக்கடலில் கவிழ்ந்த பயணிகள் படகு - 13 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து இன்று மாலையில் எலிபெண்டா தீவுக்கு பயணிகள் படகு ஒன்றுச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த கடற்படை படகு, பயணிகள் படகின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பயணிகள் படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. மேலும், அந்தப் படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 13 பேர் பலியானதாகவும், 101 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடற்படை தெரிவித்துள்ளதாவது:- "மும்பை துறைமுகத்தில் கடற்படை படகின் என்ஜினை சோதனை செய்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 peoples died for boat accident in mumbai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->