மதுபானக் கூடத்தில் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் - அதிரடி காட்டிய போலீசார்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான மதுக்கூடங்கள் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. மது போதையில் பொழுதை கழிப்பவர்களுக்கு பஞ்சராஹில்ஸ் பகுதி சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. 

அதிலும், தனியார் மதுபான கூடத்தில் ஆண் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை நடனமாடும் பணியில் அமர்த்தபட்டுள்ளனர். இந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வந்ததனால் இந்த மதுபான கூடத்தில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், நேற்று இரவு சனிக்கிழமை என்பதால் அதிகளவில் கூட்டம் இருந்தது. மேலும், ஆபாசமாக நடனமாடிய பெண்களுடன் வாலிபர்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் போலீசார் மதுபானக் கூட்டத்திற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

பின்னர் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் உட்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அந்த கட்டிடத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

140 peoples arrested in telungana for dance in bar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->