ஆப்ரேஷன் 'D' வேட்டையில் 149 பேர் கைது...!!! ரூ.7 கொடியே 9 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்...!!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் போதைப் பொருள் பயன்படுத்து பவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் காவலர்கள் அதனை கட்டுப்படுத்த அதிரடி வேட்டையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கடந்த மாதம், ஆபரேசன் 'D' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.இந்த அதிரடி சோதனையில் மாநிலத்தின் பலப் பகுதிகளிலும் ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதில்  கஞ்சா, மெத்தம்பேட்டமைன், எம்.டி.எம்.ஏ., ஹெராயின், பிரவுன் சுகர், நைட்ரஸெபம் மாத்திரைகள்,கஞ்சா சாக்லெட்டுகள், எரிசாராயம் என பல்வேறு வகையிலான போதை வஸ்துகள் காவலரிடம் வேட்டையில் சிக்கின.

மேலும் மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7,09,00,000 ஆகும். இது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி காவல்துறை தொடர்பான வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் உள்பட1501 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

149 people arrested Operation D hunt Drugs worth Rs 7point9 crore seized


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->