தமிழக அரசுக்கு வேண்டுகோள்!!ஏழை மாணவர்கள் கற்கும் வகையில் மருத்துவ பாடத்தை தமிழில் உருவாக்குங்கள்...!!! - பிரதமர் மோடி
Request Tamil Nadu government Develop medical course Tamil poor students can learn prime Minister Modi
பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் மக்கள் முன் உரையாற்றி வருகிறார்.அப்போது அவர் உரைத்ததாவது,"இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பல மாவட்டங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் திட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கான்கிரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1,400 மக்கள் மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
80 % தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைப்பதால் மக்களின் 700 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏழைக் குழந்தைகளும் மருத்துவப்படிப்பினை கற்கும் வகையில் தமிழ்மொழியில் பாடத்திட்டங்களை உருவாக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுக்கோள் விடுக்கிறேன்.
மருத்துவ படிப்புகளை தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பதே விருப்பம், அதற்கான வழியை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Request Tamil Nadu government Develop medical course Tamil poor students can learn prime Minister Modi