திருமண விருந்தில் சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நல குறைவு.. மத்தியபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


திருமண நிச்சய விழாவில் உணவு சாப்பிட்ட 150க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியபிரதேச மாநிலம் பீடல் மாவட்டத்தின் பிந்த்ரை கிராமத்தில்  திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வந்திருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

விருந்து உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அங்கிருந்த பலருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விருந்து சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் அங்கு உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து உணவை மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிச்சயதார்த்த விழாவில் உணவு சாப்பிட்டு 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

150 persons admitted in hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->