கர்நாடக தேர்தல்: ரூ.174 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தேர்தலையொட்டி கர்நாடகாவில் இதுவரை ரூ.174 கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கர்நாடகா சட்டசபை தேர்தல் வருகின்ற மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தோ்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டுமாநில முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.174 கோடி 10 லட்சத்து 21 ஆயிரத்து 476 மதிப்புள்ள ரொக்கம், தங்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், ரூ.71 கோடியே 93 லட்சத்து 1 ஆயிரத்து 992 ரொக்கமும், ரூ.18.87 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களும், ரூ.38.74 கோடி மதுபானமும், ரூ.15.11 கோடி 11 போதைப்பொருளும், ரூ.29.43 கோடி தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக இதுவரை 1,490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

174 Crores worth of cash and prizes confiscated so far in Karnataka elections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->