கள்ள சாராயம் குடித்த 19 பேர் பலி.!! காட்டிக்கொடுத்தால் உயிருக்கு ஆபத்து.!! - Seithipunal
Seithipunal


முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹரியானா மாநிலம் முழுவதும் கள்ள சாராய உயிரிழப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் அம்பாலா மற்றும் யமுனா நகர் மாவட்டங்களில் காவல்துறை சிறப்பு குழுவை உருவாக்கி தேடுதல் வேட்டை நடத்தியதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 200 போலி மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கைது நடவடிக்கைக்கு காரணம் யமுனா நகர் மற்றும் அம்பாலா ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கடந்த புதன்கிழமை கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று உயிர பலி எண்ணிக்கையானது 19 ஆக உயர்ந்தது. இதன் காரணமாகவே இரண்டு மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தி 7 பேரை ஹரியான போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க வருமாறு கிராம மக்களை போலீசார் அளித்த போது அவர்களை அடையாளம் காட்டினால் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அச்சம் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 people died after drinking illicit liquor in Haryana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->