மாநிலங்கள் அடிப்படையில் சிறுபான்மையினர் நிர்ணய வழக்கு! பதில் அளிக்காத 19 மாநிலங்கள்!
19 states did not report on minority status on state basis
இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் அங்கு பெரும்பான்மையாக உள்ளவர்கள் சலுகைகளை அனுபவிக்கின்றனர் என பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபத்தியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிறுபான்மையினர் அந்தஸ்து அளிப்பது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தி இருந்தது.
அதன் பிறகு மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில் மாநில அரசுகளின் கருத்துக்கு கேட்டு சிறுபான்மையினர் அந்தஸ்து தொடர்பாக மத்திய அரசே முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எல் கவுல், ஏ.எஸ் ஓக்லா ஆகியோர் அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது .
அப்பொழுது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பல்வேறு துறைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுவரை பஞ்சாப், மிசோரம், மணிப்பூர், ஒடிசா, உத்தரகாண்ட், குஜராத், தமிழகம், மேற்குவங்கம் உட்பட 14 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் மிகப்பெரிய சிக்கலையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் மீதமுள்ள 19 மாநிலங்கள் இன்னும் தங்களை நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. எனவே கூடுதல் காவல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக மீதமுள்ள 19 மாநிலங்கள் 4 வாரங்களுக்குள் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் மத்திய அரசு 6 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
19 states did not report on minority status on state basis