காஷ்மீரில் தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதாம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இதில், முத்தல் பகுதிக்கு உட்பட்ட சமோலே கிராமத்தில் வசித்து வரும்  பில்லா சன் என்பவரின் குடும்பத்தினர் நேற்றிரவு வீட்டில் உள்ள அறை ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

அவர்களின் குழந்தைகளான ஆரிப் (வயது 3) மற்றும் 2 மாத குழந்தை கனி ஆகியோர் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்களது வீடு மண்ணிற்குள் புதைந்தது. 

இதையறிந்த, குடும்பத்தினர்கள் உடனடியாக வெளியே சென்றதால் உயிர் தப்பினர். ஆனால், தூங்கிக்கொண்டிருந்த  2 குழந்தைகளும் நிலச்சரிவுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதன்பின் குடும்பத்தினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர் .இந்த தகவலை அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியை நடத்தினர். 

அப்போது, உயிரிழந்த 2 குழந்தைகளின் உடல்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 children died while sleeping in Kashmir..!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->