பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் "பிரகாஷ் சிங் பாதல்" மறைவு - 2 நாள் துக்கம் அனுசரிப்பு - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், சிரோணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவர் இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி தனது 95 வயதில் காலமானார். இவர் 5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார். இந்நிலையில் இவரது மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவை அடுத்து, 2 நாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகல் லாம்பியில் உள்ள அவரது சொந்த கிராமமான பாதலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 days mourning following demise of former Punjab CM Parkash Singh Badal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->