அயோத்தி ராமர் கோவிலில் 2 பக்தர்கள் உயிரிழப்பு - காரணம் என்ன?
2 devotees died in ayodhi ramar temple in uttar pradesh
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் கும்பாபிஷேம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த வயது முதிர்ந்த ஆணும், பெண்ணும் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும், எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தனர்.
உடனே அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இருவரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.
இதற்கிடையே இருவரும் கூட்ட நெரிசல் காரணமாவே இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர்கள் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், ராமர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
2 devotees died in ayodhi ramar temple in uttar pradesh