கோடை வெயில் - திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலில் நீர் மோர் பந்தல்.!!
neer mor pandal in trichy sri rangam temple
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் உள்ளன. "சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்" என்று பல அரச வம்சம்களால் இந்தக் கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது.
இப்படி புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து காக்கும் வகையில் மூலவர் ரெங்கநாதர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை கோவில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் தொடங்கி வைத்தார். கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல கோவில் வளாகம் முழுவதும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளது.
English Summary
neer mor pandal in trichy sri rangam temple