அடடே!!! பாம்பன் பாலம் திறந்து வைத்த பிறகு, ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்த பிரதமர் மோடி!!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு பா.ஜ.க.வின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்று திறந்து திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று ராமேசுவரம் மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிறகு செங்குத்து வடிவிலான தூக்கு பாலத்தை ரிமோட் மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி, அதன் வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து சென்றதை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

நாட்டின் தேசியக்கொடி பறக்க அதிலிருந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடியை பார்த்து சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்தினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் வணக்கம் செலுத்தி கையசைத்தார்.

இதில் சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டு சென்றார்.அதன் பிறகு  ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடி தரிசிக்கும் காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After inaugurating Pamban Bridge PM Modi visited Ramanathaswamy Parvadavarthini Ambal temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->