ஆதார்-பான் இணைக்காவிடில் 2 மடங்கு அபராதம்..! மத்திய அரசு தகவல்.!! - Seithipunal
Seithipunal



மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதார் கார்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கான காலக்கெடுவை தொடர்ந்து நீடித்து வந்தது. தற்போது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றுடன் பான் கார்டுடன் - ஆதார் எண்ணை இணைக்க தவறினால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, ஆதார் கார்டு- பான் கார்டை இணைக்காவிடில்,  ஜூலை 1ஆம் தேதி  (நாளை) முதல் இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அது செல்லாது என்று அறிவிக்கப்படும் என்றும்,  அத்தகைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஏற்கனவே வருமான வரித்துறை தெளிவாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 time penalty for not linking aadhaar and pan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->