அடுத்தடுத்து அதிர்ச்சி - நிலச்சரிவால் இமயமலையில் 20 பேர் பலி.!
20 peoples died for landslide in imaiyamalai
கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டை போல் மேகவெடிப்பால் இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கேயும் இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பாலங்கள், சாலைகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகள் என்று அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்துச் சென்று காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் செல்லும் பக்தர்கள் பல இடங்களில் சாலை துண்டிப்பு, ஆற்று வெள்ளம் காரணமாக சிக்கித்தவிக்கிறார்கள்.
அவர்களை மீட்க இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதுவரைக்கும் 5 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு லிஞ்சோலிக்கு அருகிலுள்ள ஜங்கிள்சட்டியில் ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக கேதார்நாத் செல்லும் மலைப்பாதை முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது.
அந்த வழியாக கேதர்நாத் சென்ற பக்தர்கள் பிம்பலி பகுதியில் சிக்கிக்கொண்டனர். மேலும் கோரபரவ், லிஞ்சோலி, பாடி லிஞ்சோலி மற்றும் பிம்பலி உள்ளிட்ட இடங்களில் சாலை மோசமடைந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுவரைக்கும் மேகவெடிப்பில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்து விட்டது. மேலும், 45 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் மூன்று மாவட்டங்கள் முற்றிலும் உருக்குலைந்து போய்விட்டன. குலு மாவட்டத்தின் மணிகரன் பகுதியில் உள்ள மலானா மின் திட்டத்தில் 33 பேர் சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
20 peoples died for landslide in imaiyamalai