2021..கடந்து வந்த பாதை..இவ்வுலகை விட்டு மறைந்தவர்கள் யார்.? 2021 - இறப்புகள் ஓர் பார்வை.!
2021 celebrities death
ஜனவரி
இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான பூட்டா சிங் தமது 86வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
எழுத்தாளர் ஆ.மாதவன் தனது 87வது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார்.
பிப்ரவரி
தா.பாண்டியன், இந்திய பொதுவுடைமை கட்சியின் தலைவர் தமது 88வது வயதில் வயது மூப்பால் காலமானார்.
ஏப்ரல்
நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் தனது 59வது வயதில் இயற்கை எய்தினார்.
முன்னாள் இந்திய அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி உடல் நலக்குறைவால் தமது 91வது வயதில் காலமானார்.
தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் தமது 54வது வயதில் மருத்துவமனையில் காலமானார்.
மே
நடிகர் பாண்டு உடல் நலக்குறைவால் தமது 74வது வயதில் காலமானார்.
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவிகளில் ஒருவரான மைதிலி சிவராமன் தமது 81வது வயதில் காலமானார்.
ஜூன்
ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் பெருந்தொற்று நோயால் சண்டிகரில் காலமானார்.
ஜூலை
பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் திலிப் குமார் தமது 98வது வயதில் காலமானார்.
இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங் தமது 87வது வயதில் காலமானார்.
சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் தமது 88வது வயதில் காலமானார்.
ஆகஸ்ட்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் 81வது வயதில் சென்னையில் காலமானார்.
மதுரை ஆதினத்தின் 292வது மடாதியாக இருந்த அருணகிரிநாதர் ஆகஸ்ட் 13, 2021 அன்று முக்தி அடைந்தார்.
செப்டம்பர்
தமிழ்த் திரைப்படக்கவிஞர் புலமைப்பித்தன் உடல் நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமது 80வது வயதில் காலமானார்.
அக்டோபர்
தமிழ் திரைப்படக்கவிஞர் பிறைசூடன் உடல் நலக்குறைவு காரணமாக தமது 65வது வயதில் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் தமது 82வது வயதில் காலமானார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக தமது 46வது வயதில் காலமானார்.
டிசம்பர்
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் கொனியேட்டி ரோசையா தமது 88வது வயதில் காலமானார்.
பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் பிபின் இராவத் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்.