2021 கடந்து வந்த பாதை.. புதிய அதிபர்.. புதிய நிர்வாக இயக்குநர்.. என நியமனங்களில் நிகழ்ந்த மாற்றங்கள்!
2021 crossed all programs
2021... கடந்து வந்த பாதை: நியமனங்கள் - ஓர் பார்வை.!
ஜனவரி இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மா பதவியேற்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவியேற்றார்.
தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் 26வது தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் பதவியேற்றார்.
அமெரிக்க ராணுவத்தில், தலைமை தகவல் அதிகாரியாக தமிழரான ராஜ் ஐயர் நியமிக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வாரியம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக ஜெய் ஷாவை நியமித்தது.
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2021ஆம் ஆண்டிற்கான தலைவராக பிஜி நாட்டின் தூதர் நஜாத் ஷமீம் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க தொழிலதிபர் கிரண் மஜும்தார்-ஷா அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஜெகதீசன் என்பவரை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்தார்.
தமிழக அரசின் 47வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி : அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக பவ்யாலால் என்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் செய்யப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ICC தனது புதிய துணைத்தலைவராக இம்ரான் குவாஜா என்பவரை நியமித்துள்ளது.
கூகுள் கிளவுட் இந்தியாவுக்கான புதிய நிர்வாக இயக்குநராக பிக்ரம் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.
சீனாவில் ஐ.நா ஒருங்கிணைப்பாளராக இந்தியாவின் சித்தார்த் சாட்டர்ஜி பொறுப்பேற்றார்.
தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசன் நியமிக்கப்பட்டார்.
ஐ.நா. வளர்ச்சி திட்டப் பிரிவின் நேர் உதவி செயலாளராக, இந்தியாவை சேர்ந்த உஷா ராவ் மோனரி நியமிக்கப்பட்டார்.
கிழக்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் தருண் சோப்தி பொறுப்பேற்றார்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் நியூயார்க் பிரிவு தலைவராகவும், அந்த அமைப்பின் துணை பொதுச்செயலாளராகவும் இந்திய பொருளாதார நிபுணர் லிகியா நோரோன்ஹாவை ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்தார்.
English Summary
2021 crossed all programs