2021 திரும்பி பார்ப்போம்.. இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்.. பார்க்கலாம் வாங்க..!!
2021 india flashback
இந்தியாவின் மிக நீளமான எஃகு வளைவு பாலத்தை மேகாலயாவின் முதலமைச்சர் கான்ராட் கே சங்மா திறந்து வைத்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அரசாங்கத்தின் டிஜிட்டல் காலண்டர் மற்றும் டைரி பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
2021 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்து கொள்வதற்கான திட்டத்திற்கு பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற்றது.
குஜராத்தில் நிமிடத்துக்கு 280 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தித்திறன் கொண்ட ஆலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மம்தா பானர்ஜி மூன்றாம் முறையாக மேற்கு வங்காள முதலமைச்சராக பதவி ஏற்றார்.
மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.
நடப்பாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் கற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்தது.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் அரசியல் சட்ட வரைவு குழுத் தலைவரான பி.ஆர்.அம்பேத்கரின் நினைவிடத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயில் அன்ன பிரசாதத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டது.
ஆயுர்வேதத்தை மேம்படுத்தும் 'தேவரண்ய யோஜனா" என்னும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு அறிமுகப்படுத்தியது.
ஜெர்மனி அரசு நிறுவனமான ஜெர்மன் அகாடமி எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் உதவியுடன் சென்னை ஐஐடியில் சர்வதேச நீர் மற்றும் பருவநிலை தகவமைப்பு மையம் தொடங்கப்பட்டது.
நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ள நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்திலும், சென்னை 3வது இடத்திலும் உள்ளன.