கடந்து வந்த பாதை 2021.. இந்தியா ஓர் பார்வை..!
2021 memories in India
ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றார்.
ஜெய்ப்பூரில் சீதாபுரா சிபெட் இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் சேர்க்கப்பட்டது.
உயர் சாம்பல் இந்திய நிலக்கரியை மாற்றுவதற்கான உள்நாட்டு தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கியது.
ஏர் இந்தியாவை டாடா குழுமம் ரூ.18,000 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
2019ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது திரைப்பட நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயில் வளாகத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே பீகார் மாநிலத்தில் அதிக சதவீதத்திலான ஏழைகள் உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட பலபரிமாண வறுமை குறியீட்டு பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.
புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரை மூலம் அறிவித்தார்.
தேர்தல் சீர்திருத்த சட்ட வரைவு (2021) மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பெண்களின் திருமண வயது 21ஆக உயர்த்திய சட்ட வரைவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமானது புதுடெல்லியில் தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிப்பெயர்ப்பும், தொல்காப்பியம் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை கன்னட மொழியில் மொழிப்பெயர்த்து வெளியிட்டது.