இந்தியாவில் 25 ஆண்டுகள் வாழ்ந்த புலி உயிரிழப்பு.!
25-year-old tiger dies in India
இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்கிற புலி உயிரிழந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடக்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபாராவில் உள்ள கைராபரி சிறுத்தைப்புலி மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உலகின் மிகப்பெரிய சதுப்புநில டெல்டாவான சுந்தர்பன்ஸில் ஒரு முறை முதலை ஒன்று ராஜா புலியின் வலது பின்னங்காலை கடித்ததால் அது வடக்கு வங்காளத்தில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சிறுத்தைப்புலி மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அதற்கு 11 வயதாக இருந்தது. அதன் பிறகு அது மேலும் 15 ஆண்டுகள் அங்கு வாழ்ந்துள்ளது. மொத்தம் 25 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் வாழ்ந்த அந்த புலி மேற்குவங்கத்தில் உள்ள ஒரு மீட்பு மையத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தது.
இன்று உயிரிழந்த புலியின் உடலுக்கு வனத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
English Summary
25-year-old tiger dies in India