இந்தியாவில் வேகம் எடுத்த ஒமைக்ரான்.. ஒரே நாளில் 128 பேருக்கு தொற்று.!!
29 dec omicron update in india
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, அரியானா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, உத்தரகாண்ட், சண்டிகர், காஷ்மீர், உத்தரபிரதேசம், கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தற்போது ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது .
இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரித்துள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 781 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி - 238, மகாராஷ்டிரா - 167, குஜராத் - 73, கேரளா - 65, தெலங்கானா - 62, ராஜஸ்தான் - 46, கர்நாடகா - 34, தமிழ்நாடு - 34, அரியானா - 12, மேற்கு வங்கம் - 11, மத்திய பிரதேசம் - 9, ஒடிசா - 8, ஆந்திரா - 6, உத்தரகாண்ட் - 4, சண்டிகர் - 3, காஷ்மீர் - 3, உத்தரபிரதேசம் - ௨ கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் தொற்றில் இருந்து 241 பேர் குணமடைந்துள்ளனர்.
English Summary
29 dec omicron update in india