ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - 3 பேர் பலி.!
3 killed in goods train derails in odisha
ஒடிசாவின் ஜாஜ்பூரில் உள்ள கோரே ரயில் நிலைய நடைமேடையில் இன்று காலை 6.44 மணியளவில் சரக்கு ரயில் தடம் புரண்டததில் 3 பேர் உயிரிழந்தனர்.
பலோர்-புவனேஸ்வர் ரயிலில் ஏறுவதற்கு ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதில் எட்டு வேகன்கள் பிளாட்பாரம் மற்றும் காத்திருப்பு கூடத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஒரு குழந்தை உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜஜ்பூர் கோரே நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்
English Summary
3 killed in goods train derails in odisha