இந்து மத நம்பிக்கையை பரப்ப, பாதுகாக்க 3000 கோயில்கள் கட்டப்படும் - மாநில அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு.!
3000 hindhu temples build in Andhra Pradesh
ஆந்திராவில் ஒவ்வொரு கிராமங்களிலும் இந்து கோயில் இருப்பதை உறுதி செய்வதற்காக மொத்தம் 3000 கோயில்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழிகாட்டுதலின்படி இந்து மத நம்பிக்கையை பரப்பவும், பாதுகாக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர துணை முதல்வரும் அறநிலை துறை அமைச்சருமான சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்து மத நம்பிக்கையை பெரிய அளவில் பரப்பவும், பாதுகாக்கவும் நலிந்த பிரிவினரின் உள்ள பகுதிகளில் இந்து கோயில்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளை கோயில்கள் கட்டுவதற்காக தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளது.
இதில், அறநிலையத்துறையின் கீழ் 978 கோயில்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 25 கோயில்களின் பணிகள் ஒரே உதவி பொறியாளர் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில கோயில்களை புதுப்பிக்கவும் கோயில்களில் பூஜைகள் நடத்தவும் இதுவரை ரூபாய் 38 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் ஒரு கோயிலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தூப தீப நைவைத்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட 25 கோடி நிதியிலிருந்து ரூபாய் 15 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தூப தீப திட்டத்தின் கீழ் 2019 கோயில்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தற்போது 5000 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
3000 hindhu temples build in Andhra Pradesh