8 ஆண்டு கால ஆட்சியில் 3000 ரெய்டுகள்..!! 23 பேரை மட்டுமே கைது செய்த அமலாக்கத்துறை..!! பாஜகவை விளாசிய ஆம் ஆத்மி..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கடந்த 8 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது 3000 சோதனைகளை மத்திய பாஜக அரசு ஏவி விட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் சமர்ப்பித்த நோட்டீஸில் "சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி எம்.சி.டி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது" என குற்றம் சாட்டை முன் வைத்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் "இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பொதுவெளியில் பேச விடுவதில்லை, நாடாளுமன்றத்திலும் பேச விடாமல் தடுக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு அமலாக்க துறையை தவறாக பயன்படுத்தி கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சுமார் 3000 சோதனைகளை நடத்தியுள்ளது.

அவர்களில் வெறும் 23 பேரை மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஆனால் ரு.20,000 கோடி மோசடி செய்து இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய நீரவ்மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, ரெட்டி பிரதர்ஸ், எடியூரப்பாவின் ஊழல் போன்ற வேறு எந்த விஷயத்திலும் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்ததில்லை. இவர்கள் மீது எல்லாம் அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் எனது கேள்வி. 

நீங்கள் நாட்டை கொடுமைப்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்த விரும்பினால் அனைவரையும் கைது செய்து சிறையில் அடையுங்கள். மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள எம்எல்ஏ மற்றும் எம்.பிக்களை அச்சுறுத்தி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 211 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அவர்களது சொந்த கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்" என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3000 raids of bjp govt in last 8 years ED arrested only 23 people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->