சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 317 வது நினைவு தினம் - திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!! - Seithipunal
Seithipunal


சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 317 வது நினைவு தினம் - திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!!

தமிழகத்தில் கிருஸ்துவ மதத்தைப் பரப்பும் வகையில் சீகன்பால்கு கி.பி. 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி டென்மார்க் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு தரங்கம்பாடிக்கு வந்தார். அதன் பின்னர் தமிழ் மொழியை கற்றுக்கொண்டு எழுதவும், படிக்கவும், சரளமாக பேசவும் செய்தார். 

இதைத்தொடர்ந்து 1715-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டு வந்து, தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டரையில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துக்கள் தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். 

அதன் மூலம் சீகன்பால்குவே இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் பைபிளை காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார். அதன்பிறகு, தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இன்று தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருப்பதற்கு சீகன்பால்குவும் ஒரு காரணம் ஆவார். ஆசியாவிலேயே முதல் தேவாலயமான "புதிய எருசேலம்" ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-இல் அமைத்து விட்டு 1719-இல் உயிரிழந்தார். 

இந்த நிலையில் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்து இறங்கிய 317 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி, மாலைகள் அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.   

இந்த நிகழ்வில் தரங்கை பேராயர் ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் கலந்துகொண்டு சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர்  ஜான்சன் ஜெயக்குமார், பிஷப் ஜான்சன், மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன், சபைகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

317 th memorial day of seiganpalku celebrate in tharangampadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->