கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வசூல்.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா.?
34,742.56 crores were collected through toll booths in the last financial year
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களில் பயணிப்பதற்காக குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதனை வசூலிப்பதற்காக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிளுக்கு கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சுங்கச்சாவடி தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்ததாவது. கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து ரூ.4,183 கோடியும், குஜராத்தில் மாநிலத்தில் இருந்து ரூ.3,642 கோடியும், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், பாஸ்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க செய்ய மத்திய அரசு உத்தரவிடவில்லை. சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் தான் பணி நீக்கம் செய்து வருகிறது.
English Summary
34,742.56 crores were collected through toll booths in the last financial year