அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.! 4 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அருணாச்சலபிரதேச மாநிலம் மேற்கு சியங் மாவட்டம் டுடிங்கிற்கு அருகிலுள்ள மிக்கிங் என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்பொழுது காலை 10.45 மணியளவில் இந்திய ராணுவத்தின் டுட்டிங் தலைமையகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் அருகில் இருந்த கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து நடத்த மலைப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹெலிகாப்டர் மூலமும், வனப்பகுதி வழியாகவும், மீட்பு குழுவினர் விரைந்தனர்.

இதையடுத்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 5 வீரர்கள் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. இதில் 4 பேரில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் மற்றொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 body found in army helicopter crashes in Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->