ஜம்மு காஷ்மீர் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்.! போலீசார் விசாரணை.!
4 members of the same family died mysteriously in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பானின் பாலிஹோட் கிராமத்தை சேர்ந்தவர் செயின் சிங்(60). இவரது மனைவி சங்கரி தேவி(55). இவர்களது மகள்கள் சந்தேஷா தேவி(30) மற்றும் மோனிகா தேவி(35). இந்நிலையில் இவர்களது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாததை கவனித்த அப்பகுதி மக்கள் நேற்று காலைசெயின் சிங் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.
அப்பொழுது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூன்று பேர் பிணமாக கிடந்துள்ளனர்.
இதில் ஒரு மகள் மட்டும் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதைத் தொடர்ந்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பணியாள் மூடப்பட்ட வீட்டுக்குள் இறந்து கிடந்தவர்கள் மூச்சுத் திணறல் அல்லது கடுமையான குளிர் காரணமாக இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களது உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
4 members of the same family died mysteriously in Jammu Kashmir