மருத்துவரின் அலட்சியத்தால் 4 வயது குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல்நல குறைவால் தனது 4 வயது குழந்தையை அவசர சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். 

ஆனால், அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை வார்டில் சேர்க்க அனுமதி தர மறுத்து, அவரை வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டார். இதைக் கேட்டு சென்ற பெற்றோர்கள் அந்த வார்டில், நீண்ட வரிசையாக மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அந்த வரிசையில் குழந்தையுடன் பெற்றோர்கள் நின்றனர். 

நீண்டநேரம் குழந்தையுடன் வரிசையிலேயே பெற்றோர்கள் காத்திருந்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த குழந்தை, அவசர சிகிச்சை இன்றி தந்தையின் மடியிலேயே உயிரிழந்து விட்டது. 

பெற்றோர் இருவரும் குழந்தையின் மறைவால் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். இந்த நிகழ்வு அருகில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது. அவசர சிகிச்சை தேவைப்படும்போது, அதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாத மற்றும் மருத்துவ வசதி கிடைக்க பெறாத சூழலில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 years child dead for delay emergency treatment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->