டெல்லியில் 40% காற்று மாசுபாடு! 1.8 கோடி மக்கள் காற்றுமாசுபாட்டால் பாதிப்பு! - Seithipunal
Seithipunal


டெல்லிவாசிகளின் ஆயுட்காலம் காற்று மாசுபாடு காரணமாக  சுமார் 12 ஆண்டுகள் குறைகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்துள்ளது. ஆய்வறிக்கையில் கூறியிருப்பது: வட இந்திய சமவெளிகளில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றான டெல்லியில் வசிக்கும் 1.8 கோடி மக்கள் காற்றுமாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  சுமார் 12 ஆண்டுகள் டெல்லிவாசிகளின் ஆயுட்காலம் குறைகிறது.

டெல்லியில் தற்போதைய மாசு அளவுகள் நீடித்தால், இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் 8.5 வருட ஆயுட்காலத்தை இழக்க நேரிடும். இந்தியாவின் தலைநகரம் மற்றும் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமான டெல்லி, உலகளவில் மிகவும் காற்று மாசுபட்ட நகரமாக உள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் 40% அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, சுவாச பிரச்னைகளை தூண்டக்கூடிய பி.எம்., நுண்துகள்கள், கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.

காற்று மாசை கட்டுப்படுத்துவதில் சமீபத்திய ஆண்டுகளில்  இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட அளவை எட்டுவதற்கு இன்னும் தீவிர நடவடிக்கை தேவைபடுகிறது. 

மேலும், உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி படி, பி.எம்., - 2.5 எனப்படும் நுண்துகள்கள், 1 கன மீட்டருக்கு, 5 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டும். இந்தியாவில் 2022ல், 9 மைக்ரோ கிராமாக உள்ளது. கடந்த 2021 உடன் ஒப்பிடுகையில், 19.3 சதவீதம் குறைந்துள்ளது. 

இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40% air pollution in Delhi 1.8 crore people affected by air pollution


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->