போதையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆசனவாயில் டம்ளரை திணித்த 45 வயது நபர்.! நிகழ்ந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத் பகுதியில் கிருஷ்ணா சந்திர ராவத் என்ற 45 வயது நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சட்டவிரோதமாக நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்பொழுது, நல்ல மது போதையில் இருந்த கிருஷ்ண சந்திரா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து அவரது ஆசன வாயில் சில்வர் டம்ளரை நுழைத்தனர்.

போதையில் இருந்தபோது அவருக்கு எதுவுமே தெரியவில்லை போதை தெளிந்தவுடன் வலி கடுமையாக இருந்தது. ஆனால், இதை வெளியில் கூற முடியாது என்பதால் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு செல்லாமல் தவிர்த்து வந்துள்ளார். வேலைசெய்த சூரத் டெக்ஸ்டைல் மில்லை விட்டு 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

இதற்குள் அவரது வயிறு வீங்கி, கடுமையான வலி ஏற்பட்டது. அவரது நிலையைக் கண்ட குடும்பத்தினர் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மலக்குடலில் சிக்கி இருந்த டம்ளரை வெளியே எடுத்தனர். 

இந்த ஆபரேஷன் முடிய இரண்டரை மணி நேரம் ஆகியுள்ளது. இன்னும் 4, 5 நாட்களில் அவரது உடல்நிலை தேறி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஆபத்து கட்டம் தாண்டி விட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

45 years men did wrong Work In unconscious mind


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->