ராஜஸ்தான் : டிரக்-கார் மோதி பயங்கர விபத்து.! 5 பேர் பலி
5 killed in truck car collision in rajasthan
ராஜஸ்தான் ஹனுமன்கர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பிஸ்ராசர் கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரும், லாரியும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
5 killed in truck car collision in rajasthan