கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் பலி! 3 பேர் படு காயம்!
5 people died in the landslide in Kedarnath 3 people seriously injured
கேதார்நாத்தில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், யாத்ரீகர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படு காயம் அடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் நெடுஞ்சாலையில் எதிர்பாராத நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் யாத்ரீகர்கள் சிக்கி 5 பேர் பலியானார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 5 பேரின் உடலை நீண்ட நேரமாக போராடி மீட்டுள்ளனர். தன்னை தொடர்ந்து 3 பேருக்கு படு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த 3 நபர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதித்தனர். மேலும் பக்தர்கள் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டு இருக்கலாம் என ருத்ரபிரயாக் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், படு காயம் ஏற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு படை அதிகாரி ஒருவர் அவ்வழியாகச் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றார். சில தினங்களாக மிக கனமழை பெய்து வருவதே இந்த நிலச்சரிவுக்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
English Summary
5 people died in the landslide in Kedarnath 3 people seriously injured