டெல்லியில் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!
50th GST Council meeting begins in Delhi
டெல்லியில் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது.
நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி கொண்டு வரப்பட்டது. இந்த 6 ஆண்டுகளில் இதுவரை 49 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் டெல்லியில் பிற்பகல் 12 மணியளவில் தொடங்கியது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள், மாநில நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
50th GST Council meeting begins in Delhi