ஃபெஞ்சல் புயல்: ஒரு கிலோ சர்க்கரை இலவசம் - கடலூர் மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal



கடலூர் மாவட்டம், ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள அறிவிப்பில், கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலினால் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முழுவதும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக ரூ.2,000/- ரொக்கத் தொகை, அரிசி-5 கிலோ, துவரம் பருப்பு-1 கிலோ வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூடுதல் நிவாரணமாக சர்க்கரை-1 கிலோ வழங்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே அரிசி-5 கிலோ, துவரம் பருப்பு-1 கிலோ வழங்கப்பட்டுள்ள, கடலூர், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள 150 கிராமங்களில் 310 நியாயவிலை கடைகளில் உள்ள 1,95,983 குடும்ப அட்டைதாரர்களும் கூடுதலாக சர்க்கரை-1 கிலோ பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fengal Cyclone Ration Shop Sugar 1 kg free cuddalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->