இந்தியாவில் வறுமை மற்றும் காலநிலை மாற்றத்தால் 51% குழந்தைகள் பாதிப்பு.!
51 percentage of children affected by poverty and climate change in India
லண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு மற்றும் பிரசல்ஸ் நகரில் இயங்கும் விரிஜே பல்கலைக்கழகமும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 77 கோடியே 40 லட்சம் குழந்தைகள் வறுமை, பருவநிலை மாறுபாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகபட்சமாக கம்போடியாவில் 72 சதவீத குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மியான்மரில் 64 சதவீத குழந்தைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் 57 சதவீத குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியாவில் 51% அதாவது 22 கோடியே 20 லட்சம் குழந்தைகள் வறுமை மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பருவநிலை நிகழ்வால் 35 கோடியே 19 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் புயலால் கேரளா, ஒரிசா மற்றும் அசாம் மாநிலங்களில் பெரும்பாலான குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
51 percentage of children affected by poverty and climate change in India