சாலை விபத்தில் 6 பக்தர்கள் உயிரிழப்பு!!! உத்திர பிரதேச போலீசார் விசாரணை....
6 devotees killed in road accident Uttar Pradesh police investigating
உத்தரபிரதேசத்தில் லக்னோ மாநிலத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பக்தர்கள் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மிர்சாமுராத் அருகே ஜி.டி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர் மேலும் 5 பேர்ப் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தனர். இந்த விபத்தின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார்ப் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனை:
மேலும் அவர்களைப் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மிர்சாமுராத் காவல் நிலைய அதிகாரி அஜய் ராஜ் வர்மார்க் கூறுகையில், " இந்த மோதல் மிக வேகமாகவும், வலுவாகவும் இருந்ததால் ஜிப்பின் முன் பகுதி முற்றிலுமாகச் சேதமடைந்ததாகவும், அதில் சிக்கிக் கொண்டவர்களை வெளியே எடுப்பதில் போலீசார்ச் சற்று சிரமப்பட்டனர். மேலும் இழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாகக் கர்நாடகா காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
6 devotees killed in road accident Uttar Pradesh police investigating