மராத்தி மொழி தெரியாத பேருந்து நடத்துனர் மீது சராமாரித் தாக்குதல் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்..!
peoples attack to bus conductor in karnataga for no maratti language
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய பேருந்து நடத்துநர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடத்துநர் தெரிவித்ததாவது:- "அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் என்னிடம் மராத்தியில் பேசினார். அதற்கு அவரிடம் தனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள் என்று கூறினேன். உடனே அந்தப் பெண் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னைத் திட்டினார்.

அப்போது திடீரென்று ஏராளமான மக்கள் ஒன்றுகூடி என்னை தாக்கினர்" என்று தெரிவித்தார். இந்த தாக்குதலில் பேருந்து நடத்துநருக்கு லேசான காயம் ஏற்பட்டதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். பெலகாவி மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ளதால் இந்த மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது அங்கு எல்லைப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றன.
English Summary
peoples attack to bus conductor in karnataga for no maratti language