அசாம்-மேகாலயா எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி.! 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - Seithipunal
Seithipunal


அசாம்-மேகாலயா எல்லையில் மரம் கடத்திய லாரியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் வன அதிகாரி உட்பட 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

அசாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள மொய்க்ராங் என்ற இடத்தில் மேகாலயா-அசாம் எல்லையில் அசாம் வனத்துறை குழுவினர் அதிகாலை 3 மணியளவில் மரம் கடத்திய லாரியை மறித்துள்ளனர். ஆனால் அங்கிருந்து லாரி தப்பி ஓட முயன்றதால் வனத்துறையினர் லாரியை பின்துரத்தினர். 

அப்பொழுது வனக் காவலர்கள் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையத்து நடந்த துப்பாக்கி சூட்டில் வன அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தையடுத்து மேகாலயா அரசு 7 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவையை 48 மணி நேரம் நிறுத்தி வைத்துள்ளது.

மேகாலயா மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும், வகையில் ஊடகங்களை (வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள்) தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், மேற்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு காசி மலைகள், ரி-போய், கிழக்கு மேற்கு காசி மலைகள், மேற்கு காசி மலைகள் மற்றும் தென்மேற்கு காசி மலைகள் ஆகிய மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 killed in Assam Meghalaya border firing and internet shut in 7 districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->