ஒடிசா : பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
64 School students affected covid positive
ஒடிசாவில் பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரொனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் 3,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
64 School students affected covid positive