பிரமணர் To சூத்திரர்.. 6-ம் வகுப்பில் சாதிவெறியை தூண்டும் பாடப்புத்தகம்.!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு வழங்கும் சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் ஆறாம் வகுப்பு வரலாறில் வர்ணாசிரம அடிப்படையிலான சாதியை, ஏற்றத்தாழ்வை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதத்தில் பாடம் இடம்பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பாடத்தில் ஒவ்வொரு ஜாதியை குறிக்கும் படங்களும் வெளியாகி படிக்கும் குழந்தைகளின் மனதில் மோசமான எண்ணங்களை உருவாக்கும் விதமாக இருக்கிறது. வர்ணாசிரம முறை என்ற தலைப்பில் சத்திரியர்கள், பிராமணர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டு ஒவ்வொரு வேலைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கேள்விகளும் இருக்கின்றன. பேதமற்ற சமுதாயம் வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டிய நேரத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை உணர்த்தும் இப்படிப்பட்ட பாடம் ஏன் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. 

பஞ்சமர்கள் சூத்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள அதில் அவர்கள் உண்ணும் உணவு மற்றும் உடை உள்ளிட்டவை மோசமானதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6Th std history book make shock 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->